26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

பெண்ணின் புகைப்படத்தால் புத்தூரில் வீடு புகுந்து தாக்குதல்: 25 பெண்கள் உள்ளிட்ட 31 பேர் கைது!

புத்தூரில் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அண்மையில் திருமணமான இளம் பெண்ணொருவரின் புகைப்படத்தை கணினி வரைகலை மூலம் நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து, வட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட வந்துள்ளது. மொபிட்டல் தொலைபேசி வலையமைப்பு இலக்கத்தின் ஊடாகவே இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரிய வருகிறது.

கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகத்தில் 21, 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு மீது நேற்று இரவு 11.30 மணியளவில் கிராம மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

Leave a Comment