மாற்று சமூகத்தவரைக் காதலித்த மகளை ஆணவக் கொலை செய்த தந்தை: தகவலறிந்து தற்கொலை செய்த காதலன்!

Date:

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்த மகளை, தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த அந்தப் பெண்ணின் காதலர் தற்கொலை செய்து கொண்டார்.

தங்கத்துக்குப் பிரசித்தி பெற்ற கோலார் பகுதியே இந்த அதிர்ச்சி சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தச் சம்பவம் போடகுர்கி என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கீர்த்தி என போலீஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான அவர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

கீர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த இளைஞரான கங்காதர் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். 24 வயதான அவர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர் எனவும் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கீர்த்தி – கங்காதர் காதல் விவகாரம் கீர்த்தியின் வீட்டில் தெரியவந்துள்ளது. பட்டியலின வகுப்பை சேர்ந்த கங்காதரை காதலிக்க வேண்டாம் என கீர்த்தி வீட்டில் சொல்லியுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தி மற்றும அவரது குடும்பத்தினருக்கு இடையே கடந்த திங்கள் அன்று மாலை வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கங்காதரை கரம் பிடிப்பதில் கீர்த்தி உறுதியாக இருந்துள்ளார்.

இதையடுத்து கீர்த்தியை செவ்வாய்க்கிழமை அன்று காலை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய் அன்று காலை 6 மணி அளவில் நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கீர்த்தி கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்த கங்காதர், மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அன்று வழக்கம் போல அவரது சகோதரர் அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடிக்க வேண்டுமென கூறி, பைக்கை நிறுத்த சொன்ன கங்காதர், அந்தப் பகுதியில் வேகமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து கம்மசமுத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்