24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

யாழ் போதனாவில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

விழித்திரை சத்திர சிகிச்சையானது சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்பொழுது விழித்திரை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஷைலா பரதன் பதில் கடமையேற்றுள்ளார்.

அவர் தமது சேவையினை மக்களுக்கு வழங்கு முகமாக வாரத்துக்கு ஒருமுறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை நாளை முதல் மேற்கொள்ள உள்ளார்.

ALAKA Foundation, Malaysia நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இந் நிகழ்ச்சித்திட்டமானது யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

Leave a Comment