மண்மேடு சரிந்து விழுந்து 2 பேர் பலி

Date:

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (16) மாலை 04 மணியளவில் இடம் பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில் காலி அல்பிட்டிய வெலிஹேன மட்டக்க பகுதியைச் சேர்ந்த பி.எம்.சி.ருக்ஷான் (23) மற்றும் கே.நிலந்த (43) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது விடுதி அமைக்கும் பகுதியில் 25 அடி உயரமான பாதுகாப்பு மதில் ஒன்றை அமைக்க மண்மேடை அகற்றும் பணியில் ஒன்பது பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அகற்றப்பட்ட மண்மேடு, கொங்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு மேசன்கள் மீது சரிந்து விழுந்து குறித்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் ஏனைய தொழிலாளர்களும், அப்பகுதி வாசிகளும் ஈடுப்பட்டனர்.

சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். உயிரிழந்த இருவரும் மாமன் மருமகன் என தெரியவந்துள்ளது

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்