உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பொலிஸ் சார்ஜண்ட் பணி நீக்கம்!

Date:

புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய கட்டான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை இடைநிறுத்துவதற்கு இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது தனது கடமையை புறக்கணித்த குற்றச்சாட்டின் விளைவாக இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் (IGP) வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரிடம் 12 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சார்ஜென்ட் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து ஐஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் நடந்து சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடைநீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்