மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளை அங்கீகரித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அனைத்து சட்டங்களையும் ஆதரிப்பதக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவுபடுத்தியுள்ளது.
LGBT சமூகம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் LGBT சமூகத்தினரின் ஊர்வலமொன்று இடம்பெற்றது. இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் மோசமான கருத்தை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்தல் ஒன்றை ருவிற்றரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ளது.
We wish to make it absolutely clear that the individual who has expressed this view, whilst being a member of our organisation, in no way represents our organisations views on the matter. In fact the TNPF stands firmly in support of the LGBT 🏳️🌈 community. (1) pic.twitter.com/rPJZDO2lgU
— Tamil National People's Front (@TnpfOrg) June 11, 2023




