வருண் தேஜ்- லாவண்யா திரிபாதியின் நிச்சயதார்த்த விழா வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.
ஹைதராபாத்தில் உள்ள கொனிடேலா நாகபாபுவின் வீட்டில் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கொனிடேலா மற்றும் அல்லுவின் குடும்பத்தினருடன் லாவண்யா திரிபாதியின் குடும்பத்தினர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
நிச்சயதார்த்த விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பவர் ஸ்டார் ராம் சரண், அல்லு அர்ஜுன், அல்லு ஷிரிஷ் உள்ளிட்ட மெகா மற்றும் அல்லு ஹீரோக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களே கலந்து கொண்டனர்.
வருண் தேஜும் லாவண்யாவும் சுமார் ஐந்து வருடங்களாக காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருவதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இது குறித்து வருண் மற்றும் லாவண்யா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், இப்போது அவர்கள் இறுதியாக நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். அவர்கள்இந்த வருட இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, மெகா குடும்பத்தின் மருமகளாக வரும் லாவண்யா சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்ட பின்னரே திருமணம் நடந்ததாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. அதில் முக்கியமாக, திருமணத்தின் பின் அவர் படங்களில் நடிக்கக்கூடாதாம்.
Found my Lav!♥️@Itslavanya pic.twitter.com/OCyhWcIjMq
— Varun Tej Konidela (@IAmVarunTej) June 9, 2023