சிறைக்காவலர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட புதன்கிழமை (7) தீர்ப்பளித்தார்.
தண்டனை பெற்ற சிறைக்காவலர் எம்.ஜி. தெல்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாலக மிஹிர பண்டார (வயது 45).
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சிறைக்காவலர் மீது சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டினார். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1