இரண்டாவது திருமணம் நின்றுபோன ஆத்திரத்தில் 6 வயது மகளை வெட்டிக்கொன்ற தந்தை!

Date:

இரண்டாவது திருமணம் நின்று போன விரக்தியில் 6 வயது மகளை வெட்டிக் கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்தனர். அவர் சிறைச்சாலைக்குள் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், மாவேலிக்கரையை அடுத்த புன்ன மூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38) இவரது மனைவி வித்யா. இத்தம்பதியினரின் ஒரே மகள் நட்சத்திரா (6) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மகேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி வித்யா தற்கொலை செய்து கொண்டார். 2 வருடங்களுக்கு முன் தந்தை ரயிலில் அடிபட்டு இறந்தார். இதையடுத்து வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த மகேஷ், ஊரிலேயே தங்கிவிட்டார்.

தாய் சுனந்தா (62) மற்றும் மகள் நட்சத்ராவுடன் மகேஷ் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் சுனந்தா பக்கத்து வீட்டில் வசித்து வந்த மகள் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், மகேஷ் மகள் நட்சத்ராவை மகேஷ் கோடாரியால் வெட்டியதாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சுனந்தாவையும் மகேஷ் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றார்.

ஆனால் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

படுகாயம் அடைந்த நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகேஷின் தாயார் மாவேலிக்கரை அரசு வைத்தியசாலையில் சிகிட்சை பெற்று வருகிறார்.

மனைவி 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மறு திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் திருமணம் நிச்சயமாகி, மகேஷ் வீடும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனினும், மகேஷின் குணமறிந்து அந்த பெண் உறவை முறித்து விட்டார்.

அந்த பெண்ணை அச்சுறுத்திய வழக்கை சந்தித்து வருகிறார்.

நட்சத்திரா தனது தாயாரின் பெற்றோரை அடிக்கடி சந்திக்க விரும்பினார். இதை மகேஷ் விரும்பவில்லை. கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னரும் நட்சத்திரா தனது தாயாரின் தந்தைக்கு போன் செய்தார்.

கொலை நடந்த போது மகேஷ் மதுபோதையிலிருந்தார்.

இரண்டாவது திருமணம் நின்றுபோன விரக்தியில் மகேஷ் கொலையை செய்திருக்கலாமென கருதப்படுகிறது.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்ட மகேஷ் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகேஷ் இந்த கொலைக்காக கோடாரியொன்றை செய்வித்துள்ளார். அவர் நட்சத்திராவையும். தனத தாயாரையும், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொல்ல திட்டமிட்டிந்ததாக பெலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மீது பாஜக போலீசில் புகார்

ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர...

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது....

போர் நிறுத்தத்தை நீடித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்