ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மீது பாஜக போலீசில் புகார்

Date:

ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர மாநில பாஜக தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் நடந்த கலந்துரையாடலின் போது பிரகாஷ்ராஜ் ராமாயணம் சார்ந்த ஒரு நிகழ்வை விவரித்தார். அதில் ராமாயணக் கதாபாத்திரங்கள் நவீன கால உரையாடல்களை மேற்கொள்வது போன்ற ஒரு கற்பனையான கதையை அவர் கூறினார்.

குறிப்பாக, சீதையைத் தேடிச் செல்லும் பயணத்தின் போது தான் சாப்பிட்ட பழங்களுக்கு ராமன் பணம் செலுத்துவதாக அந்த உரையாடல் அமைந்திருந்தது. இது ஒரு கற்பனைக் கதையாகக் கூறப்பட்டாலும், இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினராகவும் உள்ள பானு பிரகாஷ், பிரகாஷ்ராஜின் பேச்சு இந்து சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜ் திட்டமிட்டே மதக் கருத்துக்களைத் திரித்துக் கூறி சர்ச்சையை கிளப்ப முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதே விவகாரத்தில் வழக்கறிஞர் அமிதா சச்தேவா என்பவரும் ஏற்கெனவே பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்