WTC Final நாள் 3 | இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்களில் ஆட்டமிழந்தது!

Date:

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளில் அவுஸ்திரேலியா 469 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 13 ரன்களில் போல்டானார். புஜாரா, கோலி 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதன்பின் ரஹானே – ஜடேஜா இணைந்து அணியை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டனர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா 48 ரன்கள் சேர்த்த நிலையில் நதன் லயன் சுழல்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே – ஜடேஜா இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 29 ரன்களும், ஸ்ரீகர் பரத் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே ஸ்ரீகர் பரத் போல்டானார். களத்திற்கு வந்த ஷர்துல் தாக்கூர் ரஹானேவுடன் கைக்கோத்தார். இன்றைய போட்டியில் ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே 5 ஆயிரம் ரன்களை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ரஹானேவை பட் கம்மின்ஸ் 89 ரன்களில் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த உமேஷ் யாதவ் 5 ரன்களில் போல்டாக, அவரைத் தொடர்ந்து 51 ரன்களுடன் நடையைக் கட்டினார் ஷர்துல். இந்த இன்னிங்ஸில் ஷர்துலின் பங்களிப்பும் முக்கியமானது. இறுதியில் முஹம்மது சமி ஆட்டமிழக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்து 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி தரப்பில், பட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்