துஷ்மந்த சமீர, லஹிரு குமாரவின் வேகப்ந்துவீச்சில் முன்வரிசை ஆட்டக்காரர்கள் கவிழ, எஞ்சியவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் காலி செய்ய… இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சாா்பில் மொஹமட் நபி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா். இப்ராஹிம் சத்ரான் 2 ஓட்டங்களை பெற்றார். ஆறு வீர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்டன. எட்ஜ் பவுண்டரிகள் சென்றதே இதற்கு காரணம்.
ஆப்கானின் முக்கிய விக்கெட்டான இப்ராஹிம் சத்ரானை, ஒரு ட்ரீம் இண்டக்கர் மூலம் லஹிரு குமாரா வீழ்த்தினார், அது சற்று வெளியே பிட்ச் ஆகி, மட்மைக்கும் பாட்டுக்குமிடையில் புகுந்து, ஸ்டம்புகளை பெயர்த்தது.. இப்ராகிம் 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஒன்பதாவது ஓவரில் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 6 ஆட்டங்களில் இப்ராஹிம் 50 ரன்களுக்கு குறைவாக வீழ்ந்தது இது இரண்டாவது முறையாகும்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் துக்ஷ்மந்த சமீர 9 ஓவர்கள் வீசி 63 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும், வனிது ஹசரங்க 4.2 ஓவர்கள் வீசி 7 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினா்ஃ
இலக்கை விரட்டும் இலங்கை 8.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களை பெற்றுள்ளது.