சுனைனாவின் ‘ரெஜினா’ ட்ரெய்லர்

Date:

சுனைனா நடிக்கும் ‘ரெஜினா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் வெளியான ‘லத்தி’ படத்துக்குப் பிறகு நடிகை சுனைனா நடிப்பில் வெளியான உள்ள படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். படத்துக்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பின்னணியில் பவா செல்லதுரையின் குரல் ஒலிக்க, மர்மங்கள் நிறைந்த காட்சிகள் காட்டப்படுகின்றன. எல்லா ஃப்ரேம்களிலும் சுனைனா நீக்கமற நிறைந்திருப்பதன் மூலம் படம் அவரைச் சுற்றியே நகர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆக்ரோஷம், அழுகை, கொலை என ரத்தமும், சதையுமாக கட் செய்யப்பட்டுள்ள ட்ரெய்லர் படத்தின் தன்மையை உணர்த்துகிறது. சதீஷ்நாயரின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்