குளியாப்பிட்டிய புறநகர் பகுதியில் உள்ள பேய் வீட்டில் சடலத்திற்கும் ஒரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக சடலமும் தொடர்புடைய குழுவினரும் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குளியாபிட்டிய சுபாரதி புர பிரதேசத்தில் அமைந்துள்ள பொசன் திருவிழா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பேய் வீடொன்றில் சடலமாக நடித்த நபரும் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவிழாவின் போது வந்த இளைஞர்கள் குழுவொன்று, சவப்பெட்டியில் சடலமாக நடித்தவரை தாக்கி கன்னத்தில் அறைந்துள்ளது. இந்த தொல்லையை சகிக்க முடியாமல் சவப்பெட்டியில் இருந்து எழுந்த சடலம், தன்னை தாக்கிய நபரை தாக்கியுள்ளார்.
நேற்றுமுன்தினம் வந்த ஒரு கும்பல் மூச்சுத்திணறல் ஏற்படும் வரை மூக்கை கிள்ளியதாகவும், இது போன்ற பல துன்புறுத்தல்களை தாம் எதிர்கொண்டதன் காரணமாக தாங்கமுடியாமல் எழுந்து, தன்னை துன்புறுத்தியவர்களை தாக்கியதாக சடலமாக நடித்தவர் தெரிவித்தார்.
பொலிசார் அந்த இடத்திற்கு சென்ற போது, பேய் வீடு போர்க்களமாக இருந்தது. இரு தரப்பும் கடும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். பொலிசார் இரு தரப்பினரையும் கைது செய்தனர்.
இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவனே சடலமாக நடித்துள்ளார்.
இரு தரப்புக்கும் அறிவுரை கூறிய பொலிசார், பிணையில் விடுதலை செய்தனர்.




