தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கும் வரை நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்க வேண்டுமென மருதங்கேணி பொலிசார் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கும் வரை வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கும்.
இதேவேளை, வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றொரு உறுப்பினரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மருதங்கேணியில் இந்த சர்ச்சைக்குரிய சம்பவங்களின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கெட்ட வார்த்தைகளினால் திட்டி, துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.




