மெஸ்ஸியின் விலகலை உறுதி செய்தது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி

Date:

லியோனல் மெஸ்ஸி விரைவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியிலிருந்து வெளியேறுவார் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் சனிக்கிழமை உறுதி செய்துள்ளது.

சனிக்கிழமையன்று லீக் 1 இன் இறுதிச் சுற்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி கிளர்மான்ட்டை எதிர்கொள்கிறது. இந்த சீசன் முடிவில் மெஸ்ஸி அணியிலிருந்து வெளியேறுகிறார்.

“பிரஞ்சு தலைநகரில் இரண்டு சீசன்களுக்குப் பிறகு, பாரிஸ் செயின்ட் ஜெர்மைனுடனான மெஸ்ஸியின் சாகசம் 2022-23 சீசனுடன் முடிவில் முடிவுக்கு வரும்” என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் மெஸ்ஸியின் எதிர்காலம் பற்றிய பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன.

மெஸ்ஸிக்கு  நெருக்கமான ஒரு ஆதாரம் ரொய்ட்டர்ஸிடம் அவர் சவுதி அரேபிய கிளப் அல்-ஹிலாலில் அடுத்த சீசனில் சேர முறையான வாய்ப்பைப் பெற்றதாகக் கூறினார்.

எனினும், மெஸ்ஸியின் சிறுவயது கழகமான பார்சிலோனாவுக்குத் திரும்பலாம் என்றும், அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் கிளப் இண்டர் மியாமியில் இணையலாம் என்றும் கூறப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்