இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்திற்கான காரணம் வெளியானது!

Date:

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது.

பெங்களூரு-ஹவுரா ரயில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு தடத்தில் சென்றுள்ளது. அந்த தடத்திர் சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விபரீதத்தை பின்னரே உணர்ந்து, சிக்னல் திரும்பப் பெறப்பட்டது. இதற்குள் விபத்து நேர்ந்து விட்டது.

இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள பிரதான தடத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது, சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288ஆக உயர்ந்து உள்ளது.மேலும், 747 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும்.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

* முதல்கட்ட விசாரணையில் தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

* சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரசிற்கு முதலில் பச்சை சிக்னல் கொடுத்து விட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

* மெயின் லைனில் சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் ரத்தானதால் லூப்லைனுக்கு மாறி சரக்கு ரெயில் மீது மோதி உள்ளது. கோரமண்டல் ரயில் பட்டிகள் தடம்புரண்டு அவ்வழியே வந்த யஷ்வந்த்பூர் -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் விபத்தில் சிக்கி உள்ளது. மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி இடித்துக் கொண்டிருந்தன. பல பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்