24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இந்தியா

பாலியல் வன்கொடுமை; செவ்வாய் தோஷம்… ஜாதகம் கேட்ட உயர் நீதிமன்றம் – தடுத்த உச்ச நீதிமன்றம்!

பெண்ணுடன் நெருங்கிப் பழகிய நபர், பின்னர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் எனக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுத்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தைச் சமர்பிக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையே பிற்போக்குத்தனமானது என அதைப் புறக்கணித்துவிட்டு, அறிவியல்பூர்வமாக அதைக் கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, அதன்பேரில் பாலியல் உறவில் ஈடுபட்டு, பிறகு திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கு பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய பெண்ணின் ஜாதகத்தை ஆராயுமாறு லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகக் கூறி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்துக்குச் சென்றார்.

அப்போது குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகவும், அதனால் தனது கட்சிக்காரர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் வழக்கறிஞர், பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று பதில் வாதத்தை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து மே 23ஆம் திகதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் தங்களின் ஜாதகத்தை 10 நாள்களுக்குள் லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டதுடன், சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜோதிடவியல்துறை தலைவருக்கு மூன்று வார கால அவகாசமும் வழங்கியது. இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா, பங்கஜ் மித்தல் அடங்கிய நீதிமன்ற அமர்வு, “ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது ஜோதிடத்துக்குள் நுழைய முடியாது. எனவே இது போன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கக் கூடாது. அதோடு ஜாமீன் மனுவில் ஜோதிட அறிக்கை தேவையில்லை. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை வழக்கின் தகுதியின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதித்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை

east tamil

காதலனை உடலுறவுக்கு அழைத்த பின் நஞ்சூட்டிக் கொன்ற யுவதிக்கு மரணதண்டனை!

Pagetamil

தாயின் கோரிக்கைக்கு சோக முடிவு – 5ம் வகுப்பு மாணவி தற்கொலை

east tamil

ஆன்மீக சங்கம நிகழ்வில் பாரிய தீ விபத்து

east tamil

மணமகனுக்கு வயது 64; மணமகளுக்கு 68 – முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம்

Pagetamil

Leave a Comment