25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இன்றையதினம் (02) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது.

இந்த நாட்டின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம்

east tamil

அனுர அரசு இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும்

Pagetamil

ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

புதிய வருடத்தில் ஆரம்பமாகிய “க்ளீன் ஶ்ரீலங்கா”

east tamil

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம்

east tamil

Leave a Comment