27.5 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்துக்கு குழாய் மூலம் வரும் காற்று!

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார்.

இன்று இடம்பெற்றுவருகின்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துரைக்கும் போதும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது ஆனால் குடிநீர் வழங்குவதற்கான குழாய் புதைக்கும் திட்டமானது நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது.

ஆனால் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்த குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கினை காட்டுகிறார்கள். இதுதான் உண்மை. குறிப்பாக இந்த அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாக இல்லை.

அண்மையில் நான் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தோம். எனவே கிடப்பில் கிடக்கின்ற அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

Leave a Comment