ஓடிக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரம் கழன்று, இரண்டு சிறு பிள்ளைகளை ஏற்றியபடி பெண்ணொருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், பெண் உயிரிழந்ததாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுவிட்ட குருந்துவத்தையில் வசிக்கும் எச்.பவிதா குமாரி (36) என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பெண் தனது 13 வயது மகனையும், அவரது மகனின் நண்பர் ஒருவரையும் மேலதிக வகுப்புகளுக்கு மோட்டார் சைக்கிளில் கொனாபொல பதுவிட்ட பகுதியில் இருந்து குளுபான நோக்கி அழைத்துச் சென்ற போது விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1