இத்தாலி ஓபன் டென்னிஸில் ரைபாகினா சம்பியன்

Date:

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சம்பியன் பட்டம் வென்றார்.

இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதிச் சுற்றில் ரைபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.

இதில் ரைபாகினா 6-4, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக அன்ஹெலினா போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ரைபாகினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சம்பியன் பட்டம் வென்ற ரைபாகினா, இந்த சீசனில் 1,000 டபிள்யூடிஏ புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியிலும் பட்டம் வென்றிருந்தார்.

இவர் 2022ஆம் ஆண்டில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்