தையிலிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரி இன்று (22) மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த முன்னணியின் பேச்சாளர் க.சுகாஸ், நாங்கள் பௌத்த விகாரைகளுக்கு எதிராக போராடவில்லை. யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு எதிராக போராட வில்லை. எமது நிலங்களை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளையே எதிர்க்கிறோம். எமது போராட்ட நியாயங்களை அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கவர்கள் புரிந்து கொண்டு, சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எம்முடன் இணைந்து போராட முன்வர வேண்டுமென்றார்.



