முக்கியச் செய்திகள்

வவுனியாவில் 1000 ஏக்கரில் கரும்பு செய்கை, சீனித் தொழிற்சாலை; சீன பின்னணி திட்டம்?: இந்தியா சந்தேகப்பார்வை!

வவுனியாவில் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ள கரும்பு பண்ணையுடனான சீனித் தொழிற்சாலையின் பின்னணியில், இந்தியா சந்தேகமடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

வவுனியா வடக்கு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு செய்கையும், சீனித் தொழிற்சாலையும் அமைக்கும் திட்டம், கொழும்பு- மத்திய அரசின் மூலம் வேகமாக நகர்த்தப்பட்டு வருகிறது.

7 வருடங்களின் முன்னர்- வடமாகாணசபை ஆட்சிக்காலத்தில் இதேதரப்புக்கள், இதேபோன்ற திட்டத்தை முன்னெடுத்த போதும், அது வெற்றியளிக்கவில்லை. அப்போதைய வடமாகாணசபை அதை நிராகரித்திருந்தது. அப்போதைய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அதனை கடுமையாக எதிர்த்தார். அப்போது ஐங்கரநேசன் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்ததால், அவரது எதிர்ப்பை கருத்தில் கொண்டு, வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் அனுமதியளிக்க மறுத்து விட்டார்.

அத்துடன், அப்போது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது இந்த திட்டம் மீளவும் கையிலெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த திட்டத்தின் பின்னணியில் சீன முதலீடு இருக்கிறது என்ற சந்தேகம் இந்தியத் தரப்புக்கு உள்ளதையும், தமது அதிருப்தியை அரசுக்கு தெரிவித்ததையும் தமிழ்பக்கம் அறிந்தது.

கடந்த 18ஆம் திகதி இந்த காணி வழங்கல் பற்றிய உயர்மட்ட சூம் கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதி, கொழும்பு உயரதிகாரிகள் பலர், வவுனியா மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தில் காணி வழங்கல் பற்றி ஜனாதிபதி தெளிவான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்திய தரப்பின் அதிருப்தியையடுத்து ஜனாதிபதி காணி வழங்கலில் பின்வாங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

வவுனியா வடக்கு பகுதியில் இந்த காணிகளை தமக்கு வழங்குமாறே முதலீட்டாளர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட SUTECX SUGAR INDUSTRY PRIVATE LIMITED என்ற நிறுவனமே இந்த முன்மொழிவை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக மைக் எஸ்.மொகமட் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.  இந்த  நிறுவனத்தின், Senior Vice President- Project சுரேன் குருசாமி குறிப்பிடப்பட்டுள்ளார்.

18ஆம் திகதி ரணில் தலைமையில் நடந்த காணிக்கான கூட்டத்தில் சுரேன் குருசாமியும் கலந்து கொண்டிருந்தார்.

சுரேன் குருசாமி ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும், பேச்சாளராகவும் செயற்படுகிறார்.

இந்த திட்டத்திற்கான முதலீடு, கிட்டத்தட்ட கொழும்பு, துறைமுக நகரத்தின் முதலீட்டுக்கு இணையானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் மறுவாழ்வை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமையின் அடிப்படையில் காணிகளை வழங்கப்படும் என்றும், அவர்கள் கரும்பை உற்பத்தி செய்து நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றும் முதலீட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி கரும்பு செய்கைக்கே கோரப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்துக்கு அல்லவென்றும் தெரிவித்தனர்.

வடக்கின் எல்லை கிராமத்தில் அமைந்துள்ள இந்த திட்டத்தின் மூலம், வடக்கின் எல்லையை காப்பாற்றலாமென்றும், 1970களில் காந்தியம் அமைப்பினால் 70களில் முன்னெடுக்கப்பட்ட குடியேற்றத் திட்டத்தை ஒத்ததாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

நான் ‘இடும் சாதி’; கொழும்பில் வளர்ந்தால் சாதி பற்றி அறிந்திருக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்க விளக்கம்!

Pagetamil

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Pagetamil

இலங்கையில் பிரமிட் மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்கள்: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!