நாடு முழுவதிலும் உள்ள 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 32,000 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், கல்முனை, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது மழை பெய்வதால் டெங்கு நுளம்புகள் பெருகும் என்றும், நுளம்புகள் உற்பத்தியாகாத சூழலை பராமரிப்பதன் மூலம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.