16 பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) காலை நிலவும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்-

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகம்,

காலி மாவட்டத்தில் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய,  மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலக பிரிவுகள்,

கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, ரம்புக்கனை, தெரணியகல, மாவனல்ல,

குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம, கலிகமுவ, ரிதிகம பிராந்திய செயலக பிரிவுகள்,

மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச செயலகங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், தொடர்ந்தும் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் குறித்து அப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்