மைனஸ் 15 டிகிரி குளிர் நீரில் குளித்து சவால் விட்ட நடிகை

Date:

நடிகை ரகுல் பிரீத்சிங் பிகினி உடையில் மைனஸ் 15 டிகிரி குளிரில் மூழ்கி, எழுந்து ரசிகர்களுக்கு சவால் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத்சிங். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பின் மீண்டும் தேவ் என்ற மற்றொரு படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களில் நடித்து வருகிறார்.

உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பவர்களில் ஒருவரான அவர் தினசரி உடற்பயிற்சி செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர். இதற்காக உடற்பயிற்சி கூடம் கூட தனியாக வைத்து நடத்தி வருகிறார்.

உடற்பயிற்சி செய்த பின்னர், அன்றைய தினம், தன்னிடம் 20 மணிநேரம் வரை கூட வேலை வாங்க முடியும் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.

அவர், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட உறைபனி பகுதியில் உள்ள நீரில் மூழ்கி, வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். வெளியே வந்ததும், குளிரில் நடுங்கியபடி, எவ்வளவு குளிராக உள்ளது என விவரித்து உள்ளார்.

மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் யாராவது முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், உங்களால் இதனை செய்ய முடியுமா? என்று ரசிகர்களை நோக்கி சவாலும் விட்டு உள்ளார்.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்