ஷாருக்கானின் ஜவான் செப்ரெம்பர் 7 ரிலீஸ்

Date:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் ரூ.1,000 கோடியை வசூலித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் ‘ஜவான்’. அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ இன்ஸ்பிரேஷனில் இந்தப் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் ஜூன் 2ஆம் திகதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பட வேலைகள் முடியாததால் ரிலீஸ் திகதி தள்ளிப்போனது. அதன்படி படம் வரும் செப்டம்பர் 7ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டங்கி’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்