வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.
இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விகாரையையும் இருவரும் பார்வையிட்டனர்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு ஆன உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், மருந்து, உணவுப்பொருட்கள் எபதையும் நேரில் அவதானித்தனர்.
இதன்பின்னர் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன், அங்குள்ள நிலவரத்தை வெளிப்படுத்தினார். உள்ளே சென்றால் வௌியே வர முடியாது, வெளியே சென்றால் உள்ளே வர முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார்.





