முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய புகையிரதம்; இருவர் பலி

Date:

வெலிகம, பொலேன பகுதியில் புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி சென்ற புகையிரதம் வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள், அவர்களின் தாய் மற்றும் இருவர் பயணித்துள்ளனர்.

இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய ஒருவரே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த 9 வயது குழந்தை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரண்டு பிள்ளைகளான தாய் மற்றும் மற்றுமொருவர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிகம பொலேன மோதர வத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை முடிந்து மூன்று குழந்தைகளையும் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்