மட்டக்களப்பில் அணிவகுத்த அழகிகள்!

Date:

வாழைச்சேனை வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு ‘காரிகை கனவு’ எனும் தொனிப் பொருளிலான கௌரவிப்பு நிகழ்வும், அழகுக்கலை நிகழ்வும் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வாழைச்சேனை வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமத்தின் தலைவர் திருமதி.ஜெயராணி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.கே.அமலினி, மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், பேத்தாழை விபுலானந்தா கல்லூரி அதிபர் எஸ்.முருகவேள், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரகுமார, வாழைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் ஜி.பி.பிரகாஸ், உடற்கல்வி பிரதி கல்விப் பணிப்பாளர் கே.சுபாஸ்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அழகுக் கலை நிபுணர்கள், கேக் வடிவமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஆயுள்வேத அழகுசாதன உற்பத்தியாளர், புகைப்படக் கலைஞர்கள் என நாற்பத்தி ஏழு நபர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமத்தின் அழகுக் கலை நிபுணர்களினால் அழகுக் கலை அலங்கார அணிவகுப்பு (பெஷன் சோ) இடம்பெற்றதுடன், கலந்து கொண்டவர்களின் மனதை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், நடனம் இடம்பெற்றது.

அழகுக் கலை நிபுணர்களினால் வாழைச்சேனை வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமத்தின் தலைவர் திருமதி.ஜெயராணி யோகேஸ்வரன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், வாழைச்சேனையில் வளம்சேர் வாழையூர் கலைச் சங்கமம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேசத்தில் வரலாற்றில் முதல் தடவையாக அழகுக் கலை நிபுணர்களினால் அழகுக் கலை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

பிரதேசத்தில் உள்ள பெண்களின் சுயதொழிலினை ஊக்குவிக்கவும் அழகு கலை தொடர்பான வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் முகமாக இவ் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்