பானிபூரியில் உப்பு குறைவாக இருந்ததால் பேக்கரியில் பெட்ரோல் குண்டுவீச்சு

Date:

அவிநாசிபாளையத்தில் பேக்கரியில் தகராறு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் அருகே அவிநாசிபாளையம் பெருந்தொழுவு, அமராவதி பாளையம் சாலை பகுதியில் இருந்த பேக்கரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிலர் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது பானிபூரியில் உப்பு குறைவாக இருப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களுக்கும், கடைக்காரருக்கும் இடையே தகராறு எழுந்தது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 4 பேரில் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை பேக்கரியில் வீசினார். பாட்டில் வெடிக்காததால் சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 4 பேரும் தப்பினர். இச்சம்பவம் குறித்து பேக்கரியை கவனித்து வந்த சதீஷ்குமார் (30) என்பவர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். பேக்கரியில் பெட்ரோல் குண்டுவீசியது திருப்பூர் செரங்காட்டை சேர்ந்த அஸ்வின் (21), தில்லைநகரை சேர்ந்த பூவலிங்கம் (25),சந்திராபுரத்தை சேர்ந்த சக்தி கணேஷ் (23), செவந்தாம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்