உள்ளூராட்சித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
நீதியரசர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி மற்றும் கலாநிதி நிஹால் ஜயசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பலரை பெயரிட்டு இந்த மனுவை தாக்கல் செய்தனர்.




