களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

Date:

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (09) இரவு வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் பஸ்வண்டி ஒன்றில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ தினமான நேற்ற வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் கதுருவெலவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பிரயணிகள் பஸ் வண்டி ஒன்றை வாழசை;சேனை நாவலடி பகுதில் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு தன்னாமுனை பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய முருகேஷ் சசி குமார் என்பவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் கரம்பா பாலாவி புத்தளம் சொந்த இடத்தை சேர்ந்த இவர் பிள்ளையார் கோவில் வீதி, ஆறுமுகத்தான் குடியிருப்பு தன்னாமுனை, ஏறாவூர். வசித்து வரும் இவர் கடந்த 16.01.2023 திகதி 9 மில்லி மீற்றர் ரக கைதுப்பாக்கி ஒன்று, மகசீன் ஒன்று, தோட்டாக்கள் 3, எஸ்.எப்.ஜி. 87 ரக கைகுண்டு ஒன்றுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்தவரை விசேட அதிரடிப்படையினர் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்