திருமணமான சில நாளில் முன்னாள் காதலியுடன் விடுதியில் தங்கிய இளைஞன்: கத்தியால் குத்திவிட்டு தூக்க மாத்திரை அருந்திய யுவதி!

Date:

புதிதாக திருமணமான இளைஞன் தனது பழைய காதலி யான யுவதியுடன் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று (1) மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இளைஞனின் ஒரு கையில் வெட்டுக் காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொகஹவெவ பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன், பொலன்னறுவை செவனப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது முன்னாள் காதலியான யுவதியுடன் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்கும் விடுதிக்கு வந்து, ஒரு அறையில் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததை முன்கூட்டியே அறிந்த காதலி அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ​​இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது. காதலி தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார்.

இந்த சண்டையில் இளைஞரின் கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காதலி  தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுதியின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்