26.1 C
Jaffna
January 25, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே இலங்கை முன்னேற முடியும்; இந்த வருட இறுதிக்குள் தீர்வு: ரணில் மீண்டும் வாக்குறுதி!

இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின், முதலில் நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இது குறித்து பேச்சு நடத்துகிறோம். இந்த வருட இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்து உள்ளேன். யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. பெரும்பான்மை சிங்கள மக்களையும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை விடயத்தில் தூரம் செல்வதால் எந்த பயனும் இல்லை என்று நான் தமிழ் கட்சிகளிடம் கூறுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் தயவு செய்து இந்த பொறிமுறைக்குள் வந்து விசேடமாக பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கமாக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள வீடியோ உரையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவரது உரையில்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. நாடு வீழ்ச்சியில் இருந்த நேரத்தில் நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றேன் நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக வீழ்ச்சி அடைந்து உணவு தட்டுப்பாடு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததோடு மக்கள் வீதிகளுக்கு இறங்கி இருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையும், பாராளுமன்றத்தையும் சிதைக்க சிலர் முயன்றனர்.

இன்று நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஸ்திரத் தன்மை அடைந்துள்ளது. உணவு தட்டுப்பாடு இல்லை. மேலும் நாட்டில் ஜனநாயக அமைப்பு செயல்படுகிறது. அச்சுறுத்தல்கள் இன்றி பாராளுமன்றம் செயல்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய பணியை தடையின்றி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்க முன்னர் ஒரு விடயத்தை பற்றி சிந்தித்தேன். சர்வதேச நானே நிதியத்துக்கு செல்வது அவசியம். உலக வங்கியின் உதவி தேவை. நாம் ஏழு பில்லியன் தொடர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி 2020 தேர்தல் விஞ்ஞானத்தில் அன்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கட்சி என்ற வகையில் நாங்கள்தான் அந்த உண்மைகளை குறிப்பிட்டோம். மற்ற அனைவரும் பொருளாதார பிரச்சினை இருப்பதை அறிந்து நிறைவேற்ற நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

அதன் விளைவு என்ன?. உண்மையை கூறிய ஐக்கிய தேசிய கட்சி இறுதியாக தேசிய பட்டியலில் விழுந்தது.

உண்மையை கசப்பானாலும் உண்மையை மக்களுக்கு சொல்வதே எங்களின் கொள்கையாகும். அதனால் நாங்கள் அதிலிருந்து பின்வாங்கவில்லை. 2020 மற்றும் 2021 எங்களது இலக்கு அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை தீவிரமடைந்த போது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சபை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது எதிர்க்கட்சி ஏனைய குழுக்கள் கலந்துரையாடலை புறக்கணித்த போதும் நானும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சியில் இருந்து கலந்து கொண்டோம்.

எனது முயற்சி அரசியல் அல்ல நாட்டின் பொருளாதாரத்தை முறையாக கையாள்வதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது ஆகும். எனவே நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்பும் பலம் என்னிடம் இருப்பதாகவும் எனக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயல்பட்டு அந்த பெறுபேறுகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையினால் ஜனாதிபதி பொறுப்பை ஏற்றேன்.

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததுக்கு முக்கிய காரணம், 2001 இல் அரசாங்கம் கவிழ்ந்த போது பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மட்டுமல்ல, பொருளாதாரத்தை பலப்படுத்தவும் முடிந்தது. 2015இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது, பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், முதன்மை வரவு செலவு திட்ட மேலதிகத்தை பெறவும் வாய்ப்பு கிடைத்தது.

எனவே இந்த பொருளாதார நெருக்கடியை என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அப்படியானால் இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதோடு அரசியல் ஸ்திர தன்மையையும் உருவாக்குவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.

தற்போது பாராளுமன்றம் இயங்கி வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின்படி செயல்படுபவர்கள் பலர் இலங்கையில் உள்ளனர்.

எனவே இதற்கு எனக்கு உதவிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கி செல்ல வாய்ப்பு கிடைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. இப்பொழுது நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்த வேண்டும்.

அதற்கு அவசியமான சட்ட திட்டங்களை கொண்டு வந்து 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குள் கொண்டுவர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நான் அதில் திருப்தி அடையவில்லை. எமக்கு இந்த பழைய பொருளாதார முறையுடன் இனியும் முன்னோக்கி செல்ல முடியாது. மொத்த தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு ஆறு வீதம் தொடக்கம் ஏழு வீதம் என்ற அளவில் விரைவாக கொண்டு வரக்கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

என்னிடம் இரண்டு எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒருவர் டி.எஸ்.சேனநாயக்க. ஆசியாவின் இரண்டாவது வலுவான பொருளாதாரத்தை நாங்கள் கொண்டிருந்தோம். அப்போது இங்கிலாந்துக்கு கடன் கொடுக்க முடிந்தது. ஜே ஆர் ஜெயவர்த்தனவின் கீழ் நாம் திறந்த பொருளாதாரத்துடன் முன்னேறினோம். திறந்த பொருளாதாரத்தை உருவாக்கும் இரண்டாவது பயணத்தை இலங்கை தான் தொடங்கியது. அதற்குப் பிறகுதான் சீனா அதனை நோக்கி வந்தது.

எனவே இந்த பின்னணியில் இலங்கையை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பொருளாதாரத்தில் யார் இறுதியாக இருப்பது என்பது குறித்து ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட முடியாது. எனவே நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

அன்று ஜே ஆர் ஜெயவர்த்தன செய்தது போல் நாம் பல புதிய திட்டங்களை முன்னெடுத்து புதிய பொருளாதாரத்தில் இணைய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் நமக்கு எதிர்காலமும் இல்லை. நாம் சிந்திக்க வேண்டியது எமது எதிர்காலத்தை பற்றி அல்ல. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். 2048 சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது முன்னேறிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் மாற வேண்டும். இந்தியா அந்த இலக்கை 20047-ல் வைத்துள்ளது சீனா 2049 அந்த இலக்குகளை அடைய உழைக்கிறது. 2048 ஆம் ஆண்டு இலங்கை அபிவிருத்தி ஆண்டாக மாற்ற வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த பொருளாதாரத்தை கட்டி எழுப்புகிறோம். அந்த புதிய பொருளாதார மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட சிறந்த பொருளாதாரமாக இருக்க வேண்டும். பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்ட போட்டி பொருளாதாரமாக இருக்க வேண்டும். நாங்கள் அங்கு செல்ல முயற்சிக்கிறோம். எனவே தான் அனைவரின் ஆதரவையும் கோருகிறோம்.

குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்க வேண்டாம். இன்று நாளை அல்ல 2048 பற்றி சிந்தியுங்கள். நாட்டை முன்னேற்ற வேண்டும். இன்று நாளை என நினைத்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். மீண்டும் பாராளுமன்றத்திற்கான மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள இந்த புதிய பாதையில் செல்ல வேண்டும். எனவே குறிப்பாக நாம் புதிதாக சிந்திப்போம். இந்த நாட்டின் பழைய அரசியல் செயல்முறையை மாற்றும் கட்சியாக நாம் மாறுவோம். அதைத்தான் நான் உங்கள் அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சர்வதேச நாணயத்தின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தாண்டிச் செல்ல எண்ணி உள்ளோம். நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டுமாயின் நாம் இரண்டு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலாவது நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இது குறித்து பேச்சு நடத்துகிறோம். இந்த வருட இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்து உள்ளேன். யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. பெரும்பான்மை சிங்கள மக்களையும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

இரண்டாவது இந்த நாட்டில் அரசியல் பொருளாதார முறைமையில் மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் கூறுகின்றனர். நாம் இதனை செவிமடுக்க வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பல கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு மேற்பார்வை குழுவிற்கு தலா ஐந்து இளைஞர்களை நியமிக்க எதிர்பார்த்து உள்ளோம். இந்த பணிகளை மே மாதத்தில் பாராளுமன்றத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

கரு ஜெயசூர்யாவின் ஆலோசனைக்கமைய மக்கள் சபைகளை உருவாக்குவதற்கான சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். இந்தப் புள்ளியில் இருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய பொருளாதார முறைமையை ஏற்படுத்துவோம்.

கடந்த வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர். திறந்த பொருளாதார முறைமையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம்.

எனவே வேற்றுமைகளை மறந்து முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக பணியாற்றுவோம் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இனப்பிரச்சினை விடயத்தில் தூரம் செல்வதால் எந்த பயனும் இல்லை என்று நான் தமிழ் கட்சிகளிடம் கூறுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் தயவு செய்து இந்த பொறிமுறைக்குள் வந்து விசேடமாக பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கமாக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

இடதுசாரி கட்சிகள் தமது கொள்கைகளுக்கு அமைய இந்த நடைமுறையை பின்பற்ற மாட்டோம் என்று கூறியுள்ளனர். தற்போது எதிர்காலத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். புதிய புதிய வேலை திட்டங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். புதிய வேலை திட்டங்களுடன் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

தொழிற்சங்கங்கள் ஏனைய அமைப்புகள் என அனைவரையும் இந்த வேலை திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். புதிய வேலை திட்டங்கள் குறித்து அமைச்சரவையின் யோசனைகளை பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளிடம் சமர்ப்பித்து மக்கள் சபையுடன் கலந்தாலோசிப்போம். இதற்காக பரந்த இணக்கப்பாட்டை எட்ட விரும்புகிறோம். அப்படியாயின் எமக்கு அச்சமின்றி முன்னோக்கிச் செல்ல முடியும். இது 25 ஆண்டு வேலை திட்டம். இந்த 25 ஆண்டு கால வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை கட்டி எழுப்பி மேம்படுத்துவோம் என்று அனைவரிடமும் கோரிக்கை விடுகின்றேன் என்றார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே ஒருமுறை உரையாற்றிய போது, கடந்த பெப்ரவரி சுதந்திர தினத்தின் முன்பாக தீர்வை காணப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment