அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் 4வது நாளான இன்று இலங்கையின் நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் இரட்டைச் சதமடித்தனர்.
காலியில் நடந்து வரும் இந்த போட்டியில் நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தனது 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவரது முதலாவது அரைச்சதம், பின்னர் சதமாக மாறி, இரட்டைத் சதமாகியது.
அன்டி மக்பிரையனின் பந்து வீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
குசல் மென்டிஸ் 222 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார். 277 பந்துகளில் 11 சிக்சர்கள், 15 பவுண்டரிகளுடன் ஆடி வருகிறார். அவரது முதலாவது இரட்டைத் சதம் இதுவாகும்.
அஞ்சலோ மத்யூஸ் 44 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 59 ஓட்டங்களை பெற்று 108 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1