பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கிலிருந்து மட்டக்களப்பு ஊடகவியலாளர் விடுதலை!

Date:

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

குறித்த வழக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் சட்டத்தரணி ரணித்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி பி.ஜெசிங்கம் ஆஜராகியிருந்தார்.

ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நிகழ்வு தொடர்பாக பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 ஆம் திகதி அன்று வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

17 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 07.03.2022.ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இ

இவரது விடுதலை தொடர்பாக சர்வதேச உள்ளுர் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...

00 புதிய பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு

ஆண்டு இறுதிக்குள் SLTB-க்கு 600 புதிய பேருந்துகள் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும்...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்