‘வீரம்’ பட ரீமேக்கான சல்மான்கானின் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ இதுவரை ரூ.60 கோடி வசூல்

Date:

‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.60 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இந்தப்படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan). சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘கேஜிஎஃப்’ புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி வெளியான இப்படம் முதல் நாள் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று (23) படம் ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 3 நாட்களில் படம் ரூ.60 கோடி வரை வசூலித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...

பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைக்கு தடை: கல்வி அமைச்சு உத்தரவு!

மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை அளிப்பதும், எந்த விதமான உடல் அல்லது மனரீதியான...

இயக்கச்சியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்