நெடுந்தீவு- குறிகட்டுவான் படகுச்சேவை இடைநிறுத்தம்

Date:

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்கு சென்றுள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்ட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்