யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 தொற்றினால் முதியவர் உயிரிழந்துள்ளார்.
நீர்வேலியை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே நேற்று முன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.
கோவிட்-19 தொற்றிற்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் 10 பேர் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.



