அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் யாழ் நல்லூரடியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இன்று நடைபெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தலில் ஈகைச்சுடரினை மாவீரரின் தயார் ஒருவர் ஏற்றிவைத்தார். இதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.