இலங்கை

யாழ் வாசியின் கனவில் வந்து தகவல் சொன்னது கடவுளா?: வீட்டு வளவில் சிலைகள் மீட்பு; கடவுளின் பெயரால் நடந்தது என்ன?

மிருசுவில் மன்னம்குறிச்சி பகுதியில் வீட்டு வளவில் நிலத்தை அகழ்ந்த போது 12 சிலைகள் வெளிப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அந்த பகுதியில் பெருமளவு மக்கள் குவிந்துள்ளனர்.

இன்று (10) இந்த சம்பவம் நடந்தது.

மன்னம்குறிச்சி ஆலயத்திற்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்தது.

தனது கனவில் வெளிப்பட்ட தகவலையடுத்து அந்த இடத்தை அகழ்ந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

சிவலிங்கம், அம்மன், நாகம் உள்ளிட்ட 12 சிலைகள் அந்த இடத்தில் வெளிப்பட்டன. அவை ஐம்பொன் சிலைகள்.

இந்த தகவல் அறிந்ததும், அங்கு பெருமளவான மக்கள் குவிந்து, சிலைகளை பார்வையிட்டும், வழிபட்டும் வருகிறார்கள்.

கொடிகாமம் பொலிசார் அந்த இடத்திற்கு சென்று சிலைகளை பொறுப்பேற்க முயன்றனர். எனினும், வீட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த முயற்சியை பொலிசார் கைவிட்டு சென்றனர்.

வீட்டு உரிமையாளர் மற்றொரு தகவலையும் வெளியிட்டார். சுமார் 20 வருடங்களின் முன்னர் தனது வளவில் ஒரு இடத்தில் தென்னம்பிள்ளையொன்று முளைத்து வந்ததாகவும், முளைக்கும் போதே அதில் குரும்பைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும், அந்த தென்னம்பிள்ளை குறுகிய காலத்தில் வாடி விட்டதாகவும், அந்த இடத்திலேயே சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த செய்தி வெளியாகும் சமயத்தில் மீண்டும் பொலிசார் அங்கு சென்று, விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். இதன்போது சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று கனவில் வெளிப்பட்ட தகவலையடுத்து, சிலைகளை அகழ்ந்து, இன்று அந்த பகுதியில் சிலைகளை வைத்து ஆலயம் அமைப்பதற்கான கும்பாபிசேகம் செய்து விட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

அதனால் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டாமென பொலிசாரிடம் தெரிவித்தார்.

அந்த சிலைகள் புதிய சிலைகள் என பொலிசார் தெரிவித்தனர். கோயிலை பிரபலப்படுத்துவதற்காக ஆடப்பட்ட நாடகமாக இருக்கலாமென்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

(மேலே படத்தில் இணைக்கப்பட்டது பிரதிநிதித்துவ படம்)

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

சு.க தலைவருக்கு இடையூறு விளைவிக்க தடை!

Pagetamil

யாழில் மொட்டு அமைப்பாளர் மாயம்!

Pagetamil

முறிகண்டியில் ஆணின் சடலம் மீட்பு!

Pagetamil

போராட்டம் ஏன்?: யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விளக்கம்!

Pagetamil

யாழ் பொலிஸ் நிலையத்திலிருந்து தனுஸ் தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment