ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹரன் ஹசிமின் மைத்துனர் குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனுடன் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹாரான் ஹாசிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் ஆவார்.
சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று உயிர்த்த ஞாயிறு தினமாகும். 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படவில்லையென கத்தோலிக்க சமூகம் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.