காதலனுடன் சமனலவெவ நீர்த்தேக்க அணையை பார்வையிட வந்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சமனலவெவ பொலிஸார் கைது செய்துள்ளது.
கான்ஸ்டபிள் யுவதியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றதாகவும், அவரை துன்புறுத்தி ஆடைகளை அகற்றி புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
யுவதியின் காதலனை கைவிலங்கிட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த குற்றத்தை செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹம்பேகமுவ காவற்துறையில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர்.
பின்னவல பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவர் தனது காதலனுடன் சமனலவெவ அணைக்கட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில் ஏராளமானோர் அந்த இடத்துக்கு வருவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
கான்ஸ்டபிள் யுவதியை காட்டுக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும், இதன் காரணமாக யுவதியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னர் கான்ஸ்டபிளைக் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.