புலஸ்திகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து மனைவி தனது கணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இக்கொலை நேற்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். நேற்று பிற்பகல் முதல் குறித்த நபரும் அவரது மனைவியும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும் திட்டியும் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போது மனைவி தனது கணவரின் மார்புப் பகுதியில் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த மனைவியும் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் மனைவி பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தின் பிரேத பரிசோதனை இன்று (10) இடம்பெறவுள்ளது.