உதயன் பத்திரிகைக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட கிறிஸ்த மத பிரிவை சேர்ந்த 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சுவேலியில் நெசவாலை கட்டிடத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அசெம்பிளி ஒஃப் ஜீவவார்த்தை என கிறிஸ்தவ மத பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் உரத்த சத்தமிட்டு வழிபாடு நடத்துவதால் அயலவர்கள் பாதிக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
நெசவாலையை மீள இயங்க வைக்கும் முகமாக, கட்டிடத்தை மீளப்பெற பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், எந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் அந்த மத பிரிவினர் வழிபாடு நடத்திய போது. யாரோ கல்லெறிந்தனர் என குறிப்பிட்டு, அயல்வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
போதகர், மகன் உள்ளிட்ட கும்பல் அயல்வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வங்கி ஊழியரான பெண் ஒருவரின் கழுத்தை நெரித்தனர். அவரது தாயாரை தாக்கினர். சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.
இது தொடர்பில் போதகர், மகன் உள்ளிட்ட 3 பேர் அச்சுவேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை செய்தியாக பிரசுரித்ததால் ஆத்திரமடைந்த அந்த மத பிரிவினர் இரண்டு வாகனங்களில் நேற்று உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உதயன் பத்திரிகை நிர்வாகம் முறைப்பாடு செய்த நிலையில், அத்துமீறி நுழைச்த கும்பலை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சுவேலி மத போதகர், மனைவி, மகள், மகன் உள்ளிட்ட 6 பேர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.