2019 இல் படகு மூலம் நியூசிலாந்து புறப்பட்ட 248 இலங்கையர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லையென்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து குடிவரவு அமைச்சு வெளியிட்ட தகவலொன்றில் இந்த படகு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நோக்கி மேற்கொள்ளப்பட்ட படகு பயண முயற்சிகள் பற்றிய விபரத்தை வெளியிட்டிருந்தது. இலங்கை, இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படகு பயண முயற்சிகள் மற்றும் அந்த படகுகளில் முடிவு பற்றிய அந்த விபரத்தில், இலங்கை படகு காணாமல் போன தகவல் வெளியாகியுள்ளது.
“ஜனவரி 12, 2019 அன்று, 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவைப் படகு இந்தியாவின் முனம்பம் அருகே மாலியங்கராவிலிருந்து 248 தமிழ் புலம்பெயர்ந்தோருடன் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டது. படகு அல்லது பயணிகளின் விவரம் எதுவும் தெரியவில்லை.” என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.