லெபனானில் இருந்து ஏவப்பட்ட எல்லை தாண்டிய ரொக்கெட்டுகளுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவித்த பின்னர் இஸ்ரேல் வியாழன் பிற்பகுதியில் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
பாலஸ்தீனிய குழுக்களே ரொக்கெட் தாக்குலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
நள்ளிரவுக்கு சற்று முன்னதாக தாக்குதல் ஆரம்பித்தது இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்தது.
பல ஹமாஸ் பயிற்சி தளங்களை தாக்கியதாக பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து விமானம் பறக்கும் சத்தங்களும், வெடிப்பு சத்தங்களும் கேட்டன.
முன்னதாக லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் 34 ரொக்கெட்டுகள் ஏவப்பட்ட பின்னர், இஸ்ரேலின் எதிரிகள் “விலையைச் செலுத்துவார்கள்” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்தார்.
இஸ்ரேலிய அவசர சேவைகள் தாக்குதலின் போது ஒரு ஆடவர் சிறு துண்டுகளால் லேசான காயம் அடைந்ததாகவும், ஒரு பெண் தங்குமிடத்திற்கு ஓடும் போது காயமடைந்ததாகவும் அறிவித்தது.