விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஜோடி பிரிந்தது?

Date:

ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவிற்கிடையில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் டோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர்கள் விஜய் மற்றும் ராஷ்மிகா. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களின் முதல் அறிமுகம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. தமக்குள் நட்பு மாத்திரமே இருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டாலும், நட்பைத் தாண்டி ஒரு பிணைப்பு உள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது.

தற்போது இவர்களின் காதல் முறிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது ராஷ்மிகா மந்தனாவிடம் இருந்து விஜய் தேவரகொண்டா விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவிடம் இருந்து பிரிந்த ராஷ்மிகா வேறொரு டோலிவுட் ஹீரோவுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்- பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஜோடியாக மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டதை தொடர்ந்து, இந்த கிசுகிசு மீண்டும் தீவிரம் பெற்றது.

ராஷ்மிகா மந்தனா மற்றும் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றனர். விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்தது மட்டுமின்றி, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை நிகழ்வில் ராஷ்மிகாவும் ஸ்ரீனிவாஸும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு இடையே ஏதோ இருப்பதாக கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...

காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கான 15 அம்ச செயல்திட்டத்தை அமைதி வாரியம் வெளியிட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டத்தின் இறுதிக் கட்டங்களைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்